50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் பயனளிக்கும் கடன் அவுட்ரீச் திட்டத்தின் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்!
By : Sushmitha
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று பீகாரின் மதுபானியில் அவுட்ரீச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்வர் ஸ்ரீ சாம்ராட் சௌத்ரி முன்னிலையில் கடன் அவுட்ரீச் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசுகையில் ஸ்ரீ சாம்ராட் சௌத்ரி மத்திய நிதியமைச்சர் மதுபானிக்கு கடன் அவுட்ரீச் திட்டத்திற்காக வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தார் மேலும் அப்பகுதியில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய நிதி அமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டார்
மேலும் கிரெடிட் அவுட்ரீச் திட்டத்தின் போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளும் வழங்கினார்
அதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது நபார்டு மற்றும் SIDBI ஆகியவை பல்வேறு கிராமப்புற சாலை திட்டங்களுக்கு முறையே ரூ.155.84 கோடி மற்றும் ரூ.75.52 லட்சத்துக்கும் அதிகமான அனுமதியை அறிவித்தார்