மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி - அச்சத்தில் மும்பை.!
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி - அச்சத்தில் மும்பை.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,50,000 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று தமிழ்நாட்டில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டன.
மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிலருக்கு அறிகுறி இருந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் அப்பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மையம் திறக்க அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி சார்பில் முகாம் அமைக்கப்பட்டு 171 பேருக்கு இரண்டு நாட்கள் பரிசோதனை நடைபெற்றது. அதில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது என மாநகராட்சி பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார். மேலும் அறிகுறி இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2524596