Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த வாரம் 5.5 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர் - விடுமுறை முடிந்தும் திருப்பதியில் குறையாத கூட்டம்

திருப்பதியில் கடந்த ஒரு வாரத்தில் 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த வாரம் 5.5 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர் - விடுமுறை முடிந்தும் திருப்பதியில் குறையாத கூட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Jun 2022 11:45 AM GMT

திருப்பதியில் கடந்த ஒரு வாரத்தில் 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது, இதனால் பக்தர்கள் இரவு பகல் பாராமல் நீண்ட தூரம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், காபி, பால் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 90,471 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 4.13 கோடி உண்டியல் வசூல் காணிக்கையாக வசூலானது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்ததால் கூடுதலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டுகள் நபர் ஒன்றுக்கு இலவச லட்டுடன் சேர்த்து 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தேவஸ்தானம் விடுத்த அறிக்கை ஒன்றில் கடந்த வாரத்தில் மட்டுமே 5,47,208 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் 2,74,840 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் மட்டும் 29.68 கோடி ரூபாய் போல் உண்டியல் வசூல் ஏழுமலையான் காணிக்கையாக செலுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News