57 ஆண்டுகளில் அர்ஜென்டினா செல்லும் முதல் இந்திய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ளார் அங்குள்ள இந்தியர்கள் பிரதமருக்கு தேசிய கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் கிட்டதட்ட 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமர் அர்ஜென்டினா செல்வது முதல்முறையாகும் அதே சமயத்தில் பிரதமர் மோடி பிரதமராக அர்ஜென்டினா வருவது இது இரண்டாவது முறை என்றும் கூறப்படுகிறது ஏனென்றால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக அர்ஜென்டினாவிற்கு சென்றுள்ளார்
பிரதமரின் இந்த பயணத்தில் பாதுகாப்பு விவசாயம் சுரங்கம் எண்ணெய் மற்றும் எரிவாயு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
பிரதமர் இந்த பயணத்தை முடித்த பிறகு பிரேசில் சென்று அங்கு நடைபெறுகின்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்