உத்தர பிரதேசத்தில் உள்ள காப்பகத்தில் ஐந்து கர்ப்பிணிகள் உள்பட 57 சிறுமிகளுக்கு கொரோனா!
உத்தர பிரதேசத்தில் உள்ள காப்பகத்தில் ஐந்து கர்ப்பிணிகள் உள்பட 57 சிறுமிகளுக்கு கொரோனா!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு காப்பகத்தில் 57 சிறுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 5 சிறுமிகள் கர்ப்பமாக உள்ளனர். இந்தச் செய்தி உபியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருக்கும் அரசு காப்பகத்தில் 57 சிறுமிகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்னும் இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனைப் பற்றிய கான்பூர் மாவட்டம் மேஜிஸ்ட்ரேட் பிரம்ம தேவ் ராம் கூறியது: "கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 கர்ப்பிணி சிறுமிகள் ஆக்ரா, ஃபெரோஸாபாத் ஆகிய பல மாவட்டத்தில் இருந்து குழந்தைகள் நல கமிட்டி பரிந்துரைத்து போக்சோ சட்டத்தில் கீழ் அழைத்து வந்தனர். பிற இரண்டு கர்ப்பிணி சிறுமிகளுக்கு பாதிப்பில்லை. இவர்கள் 7 பேரும் அங்கிருந்து வரும் பொழுதே கர்ப்பமாக இருந்துள்ளனர். அந்த ஐந்து சிறுமிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.