Kathir News
Begin typing your search above and press return to search.

6-வயது குழந்தையை 3 ஆண்டுகள் சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி கொடூரன்!

6-வயது குழந்தையை 3 ஆண்டுகள் சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி கொடூரன்!
X

ShivaBy : Shiva

  |  7 July 2021 6:30 AM IST

இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் இளைஞரணி உறுப்பினர் கேரளாவில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கிலிட்டுக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜூன் 30ஆம் தேதி அவரது ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து அந்தப் பெண்ணை மயக்கி மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், சிறுமியின் மரணம் தற்செயலான மரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட்) கட்சியின் இளைஞரணி உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.

ஜூன் 30ம் தேதி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டபோது சுயநினைவை இழந்ததாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். சிறுமி இறந்து விட்டதாக அஞ்சிய இளைஞர் சிறுமி தற்கொலை செய்து கொண்டது போல் காட்ட சிறுமியின் உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளார். காவல்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவலின் படி, விசாரணையின் போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Source : Timesnownews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News