ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் - ரூ.5 லட்சம் அபராதம்.!
ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் - ரூ.5 லட்சம் அபராதம்.!
By : Kathir Webdesk
இந்திய தேசியக்கொடி, தேசிய கீதம், அரசு சின்னங்கள், அரசு முத்திரைகள் போன்றவற்றை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது அவமதித்தாலோ அது சட்டப்படி குற்றமாகும். குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
தற்போது அதே போல ஜனாதிபதி, பிரதமரின் படங்களை அவமதிக்கும் நோக்கில் பயன்படுத்தினாலோ அல்லது பதிவிட்டாலோ 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி பிரதமரின் படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கின. இனி அது போல ஆகும் பட்சத்தில் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், பாராளுமன்றம் தர்மா சக்கரம், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.