ஆப்கானிஸ்தானில் இயங்கும் 6000 பாகிஸ்தான் தீவிரவாதிகள் - ஐ.நா. பகீர் அறிக்கை.!
ஆப்கானிஸ்தானில் இயங்கும் 6000 பாகிஸ்தான் தீவிரவாதிகள் - ஐ.நா. பகீர் அறிக்கை.!

ஐக்கிய நாடு சபையின் பொருளாதார கண்காணிப்பு குழுவின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் 6,000-6,500 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் பெரும்பாலும் தெஹ்ரிக் - இ பாகிஸ்தான் குழுவுடன் சேர்ந்தவர்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி ஆப்கானிஸ்தானில் TTP குழு மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் TTP தீவிரவாதிகள் பலர் ஈராக்கில் ISIS மற்றும் லெவண்ட்- கோஸ்ரானுடன் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், இந்தியத்துணை கண்டத்தில் இயங்கும் அல்கைதா பயங்கரவாதக்குழு ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் ஆகிய மாகாணங்களில் இருந்து ஒரு குடையின் கீழ் இயங்குகிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் AQIS பற்றிய கூடுதல் விவரங்களாக "சுமார் 150 - 200 பயங்கரவாதிகள் பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்" எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ. நா அறிக்கையின்படி பயங்கவாதத் தலைவர் உமரின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகயாக, பல தீவிரவாதத் தாக்குதல்களில் எட்டுபட AQIS திட்டமிட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
Source: https://swarajyamag.com/insta/over-6000-pakistani-terrorists-operating-in-afghanistan-says-un-report