விஜய் பட இயக்குனர்.. அடுத்ததா "அஜித்துடன்" கூட்டணி – தல 61 பற்றிய அப்டேட்.!
விஜய் பட இயக்குனர்.. அடுத்ததா "அஜித்துடன்" கூட்டணி – தல 61 பற்றிய அப்டேட்.!

தளபதி விஜய் தொடர்ந்து பிரபல இயக்குனர் அஜித்துக்கு கதை கூறியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிவடைந்த பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்க வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் 2021 ஜனவரி மாதத்தில்தான் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட கேப்பில் அஜித் அடுத்த படத்திற்கான கதையை கேட்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். ஏனெனில் அவர் போன் கால் வழியாகவே கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தளபதி விஜய்யை வைத்து தற்போது மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அஜித்திற்கு கதை கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அஜித்தும் அடுத்ததாக இந்த படத்தில் நடிக்கலாம் என முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.