சன் பிக்சர்ஸ் நிறுவனம் "தளபதி 65" படத்தை கைவிட்டதா???
சன் பிக்சர்ஸ் நிறுவனம் "தளபதி 65" படத்தை கைவிட்டதா???

விஜய் தற்போது நடித்து வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என்ற நிலையில் கொரோனா காரணமாக நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன. டீசர், ட்ரெய்லர் என படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி 65 என்ற படத்தின் அப்டேட் வெளியானது. இந்தப் படத்தை ஏ. ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.ஏற்கெனவே விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி, துப்பாக்கி, சர்க்கார் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டை கொடுத்தது. அடுத்ததாக துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுக்க முடிவு எடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த கொரோனா பிரச்சனைகள் முடிந்தபின்னர் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்பின் இந்த பணிகளுக்கு, சம்பள குறைப்பு,பட்ஜெட் குறிப்பு பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பேசியதாகவும் அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மாற்ற விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. தளபதி 65 படத்தை பற்றி எவ்வளவு சம்பளம், எத்தனை நாள் ஷூட்டிங் என்பது பற்றி நாங்கள் கலந்து பேசவில்லை என்றும் எதுவுமே முடிவாகவில்லை என்று சன் பிக்சர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.