Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பதியில் 650 கோடியில் ஆறு கிலோ மீட்டர் நீள மேம்பாலம் திறப்பு - கூட்ட நெரிசலை தடுப்பதற்கான ஸ்மார்ட் திட்டம்!

திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 650 கோடி செலவில் மேம்பாலம் பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை அமைக்கப்படுகிறது.

திருப்பதியில் 650 கோடியில் ஆறு கிலோ மீட்டர்  நீள மேம்பாலம் திறப்பு - கூட்ட நெரிசலை தடுப்பதற்கான ஸ்மார்ட் திட்டம்!

KarthigaBy : Karthiga

  |  18 Sep 2023 5:30 PM GMT

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது. தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார்.

SOURCE :maalaimalar.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News