திமுக'வில் ரூ.6500 செருப்புக்கு இருக்கும் மரியாதை தாழ்த்தபட்டவருக்கு இல்லை - கொந்தளிக்கும் தலித் சமுதாயம் #MLAVilvanathan #AmburMLA
திமுக'வில் ரூ.6500 செருப்புக்கு இருக்கும் மரியாதை தாழ்த்தபட்டவருக்கு இல்லை - கொந்தளிக்கும் தலித் சமுதாயம் #MLAVilvanathan #AmburMLA

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னப்பள்ளி கிராமத்தில், மழைக்குச் சேதமடைந்த தடுப்பணையைப் பார்வையிடுவதற்காக அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30-ம் தேதி சென்றார். தடுப்பணைக்குச் செல்லும் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், செருப்பை ஓரமாகக் கழற்றிவிட்டு வெறும் காலில் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது, பின்னால் வந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் தி.மு.க செயலாளர் சங்கர் என்பவர் எம்.எல்.ஏ-வின் செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் வீடியோவாகப் பதிவுசெய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தால்
எல்.ஏ-வைக் கண்டித்து இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை காரை ஆகிய மூன்று இடங்களில் இன்றும், ஆம்பூரில் நாளையும் போராட்டம் நடைபெறுகிறது.
"செருப்பின் மதிப்பு ரூ.6,500 என்பதால்தான் சேற்றில் படாமல் பட்டியலின சமூக நிர்வாகியைக் கைகளால் தூக்கி வரச்சொல்லியிருக்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ'' என்று கொந்தளிக்கின்றனர், தலித் அமைப்பின் நிர்வாகிகள்.
ஏற்கனவே திமுக'வில் தயாநிதி மாறன் தாழ்த்தபட்டவர்களை குறிவைத்து இழிவுபடுத்தி பேசினார், இப்பொழுது கட்சியின் எம்.எல்.ஏ வில்வநாதன் தாழ்த்தபட்ட ஒருவரை செருப்பை தூக்க வைத்திருப்பது திமுக'வில் செருப்பு'க்கு இருக்கும் மரியாதை கூட தாழ்த்தபட்டவருக்கு இல்லை என்பதையே காட்டுகிறது என கூறுகின்றனர்.