Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கானா மாநிலத்தில் 6,800 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் -அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூபாய் 6,800 கோடிக்கு அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தெலுங்கானா மாநிலத்தில் 6,800 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் -அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
X

KarthigaBy : Karthiga

  |  6 March 2024 10:57 AM GMT

தெலுங்கானா மாநிலத்தில் ரூபாய் 6,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் சாலை, பெட்ரோலியம், விமான போக்குவரத்து இயற்கை எரிவாயு போன்ற முக்கிய துறைகள் உள்ளடக்கியது .நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் தெலுங்கானா மாநிலத்தில் தான் இரண்டாவது நாளாக பயணம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் தெலுங்கானாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறினார்.


எரிசக்தி, பருவநிலை, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அடிலாபாத்தில் சுமார் 56,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும் நாட்டுக்கு அர்பணித்ததையும் நினைவு கூர்ந்த பிரதமர் , தெலுங்கானா நிகழ்ச்சியில் சுமார் 7000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலை துறைகள்,ரயில்வே, விமானம் ,பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தை நான் நம்புகிறேன் என்று கூறிய பிரதமர் அரசின் செயல்பாட்டு சித்தாந்தத்தை எடுத்துரைத்தார்.


அதே உணர்வுடன் தெலுங்கானாவுக்கு சேவை செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டவர், இன்றைய வளர்ச்சி பணிகளுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஹைதராபாத்தில் பேகம் பேட் விமான நிலையத்தில் சிவில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையத்தை திறந்து வைத்து விமான போக்குவரத்து துறையில் தெலுங்கானாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று பிரதமர் கூறினார். இந்த மையம் நவீன வகையிலான முதல் மையமாகும் என்றும் மேலும் தெலுங்கானாவுக்கு இந்த துறையில் புதிய அங்கீகாரத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது நாட்டில் விமான போக்குவரத்தில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தளத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.


வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிபாட்டில் நவீன உள்கட்டமைப்பின் மையத்தன்மையை வலியுறுத்திய பிரதமர் மோடி இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தெலுங்கானா இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது என்று கூறிய பிரதமர் மின்மயமாக்கல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதன் மூலம் மாநிலத்தில் ரயில் இணைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News