'6ஜி' பல்கலைக்கழக ஆராய்ச்சி இந்தியா திட்டம்- தொடங்கி வைத்த மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்!
ரூபாய் 177 கோடியே 27 லட்சம் மதிப்பில் 'குவால்காம்' தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் மற்றும் 6ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சி இந்தியா திட்டத்தை மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்.
By : Karthiga
சென்னை தரமணி, ராமானுஜன் ஐடி நகரில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷணவ் ரூபாய் 1777 கோடியே 27 லட்சம் மதிப்பில் 'குவால்காம்'( செமி கண்டக்டர்) தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் மற்றும் 60 பல்கலைக்கழக ஆராய்ச்சி இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் அப்போது குவால்காம் நிறுவனத் தலைவர் கிறிஸ்டியான அமோன் உடன் இருந்தார்.
பின்னர் மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது :-5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவம் ,கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்த நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது 60 ஆய்வகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.5G உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேறிவிட்டது .விரைவில் 6G தொழில்நுட்பத்தின் மூலம் இந்த உலகத்தை இந்தியா வழி நடத்தும். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இருப்பு அச்சுமுறை மூலம் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதற்கான உற்பத்தி ஒன்றரை ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலை மூலம் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் சக்கரங்கள் உற்பத்தி செய்யப்படும். இதில் 80 ஆயிரம் ரயில் சக்கரம் இந்தியாவிலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரயில் சக்கரம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது .கடந்த 60 ஆண்டுகளாக ரயில் சக்கரம் இறக்குமதி மட்டுமே செய்யப்பட்டது .தற்போது இந்த ஆலை மூலம் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும். இதன் மூலம் சில ஆண்டுகளில் ரயில் சக்கரங்கள் ஏற்றுமதியில் முதன்மை நாடாக இந்தியா மாறும்.
SOURCE :DAILY THANTHI