Kathir News
Begin typing your search above and press return to search.

7 மாதங்களாக உதவித் தொகை வரவில்லை... வாழ்வாதாரமே போச்சு - மாற்று திறனாளிகள் வேதனை!

7 மாதங்களாக உதவித் தொகை வரவில்லை... வாழ்வாதாரமே போச்சு - மாற்று திறனாளிகள் வேதனை!

SushmithaBy : Sushmitha

  |  18 Feb 2024 1:27 AM GMT

தமிழகத்தில் வருவாய் துறை சார்பில் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை ரூபாய்1500 ஆகவும், மற்றவர்களுக்கு ரூபாய் 1200 ஆகவும் உயர்த்தி கொடுக்க உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மாதத்திலிருந்து இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சுமார் 7 மாதங்களாக உதவி தொகை வழங்கப்படவில்லை என்றும் புதிய விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டும் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தினமும் ஏறி இறங்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எங்களுக்கு வாழ்வாதாரமே உதவி தொகை மட்டுமே அதுவும் கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது, புதிய விண்ணப்பத்தைக் கொடுத்து ஆணை பெறுவதற்கு ஒரு லட்சம் பேர் உதவித்தொகைக்காக காத்திருக்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News