7 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு உயிர் இழந்த மாணவர்கள் - நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
7 ஸ்டார் ஹோட்டலில் உணவு சாப்பிடும் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
By : Bharathi Latha
தமிழ்நாட்டை சேர்ந்த நகராட்சியும் மற்றும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட வட மாவட்டத்தின் ஒரு பகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது. எதை இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரணி 7 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி லோசிதா மற்றும் 5 ஸ்டார் உணவகத்தில் உணவருந்தி இறந்த +2 மாணவர் திருமுருகன் ஆகியோருக்கு நீதி கேட்டு இந்து முன்னணி போராட்டம் நடத்தியது.
மேலும் இந்த இரண்டு ஹோட்டலில் உரிமையாளர்களும் அண்ணன், தம்பிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மற்றவரின் உயிருடன் விளையாடும் ஹோட்டல் உரிமையாளர்கள் தகுந்த முறையில் கண்டிக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோர கடைகளில் கிடைக்கும் உணவுகளில் கூட சுகாதாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் ஆனால் பெரிய பெரிய ஹோட்டல்களில் குறிப்பாக 5 ஸ்டார் 7 ஸ்டார் ஹோட்டல்களில், மக்களின் உயிருடன் விளையாடும் கெட்டுப்போன மாமிசத்தை பயன்படுத்துகிறார்கள்.
மேலும் இதன் மூலம் பாதிக்கப் படுவார்கள், சிறுபான்மை இனத்தவர்கள் என்பதால் ஆளும் கட்சி உதவியுடன் சட்டத்தை வளைக்க முயற்சி செய்தும் வருகிறார்கள். எனவே ஹோட்டல் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்து இறந்த மாணவர்களுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தற்போது போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Hindu Munnani