Kathir News
Begin typing your search above and press return to search.

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உயிர் தியாகம் 70 ஆண்டுகளுக்குப் பின் தேச பக்தர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது!! பத்திரிகைகள் பாராட்டு

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உயிர் தியாகம் 70 ஆண்டுகளுக்குப் பின் தேச பக்தர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது!! பத்திரிகைகள் பாராட்டு

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உயிர் தியாகம் 70 ஆண்டுகளுக்குப் பின் தேச பக்தர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது!! பத்திரிகைகள் பாராட்டு
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2019 6:37 AM GMT


ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய ஷியாமா பிரசாத் முகர்ஜியின் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது இலட்சியத்தை அவரது கொள்கை வழி வந்த இலட்சியப் புலிகள் மோடியும், அமித்ஷாவும் நிறைவேற்றி வைத்ததாக பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.


ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனசங்கத்தை நிறுவினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தேச ஒருமைப்பாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், 370-ஆவது சட்டப் பிரிவு தேசநலனுக்கு எதிரானது என்றும் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தார். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார்.
1952-ஆம் ஆண்டு தனது கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ஒரு நாட்டுக்கு இரு அரசியலமைப்புச் சட்டங்கள், இரு கொடிகள் இருக்கக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது.


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஷியாமா பிரசாத் முகர்ஜி வலியுறுத்தியதை இப்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
பிற இந்தியக் குடிமக்கள் காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியேறக் கூடாது; காஷ்மீர் செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த 1953-ஆம் ஆண்டு ஷியாமா பிரசாத், காஷ்மீர் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றார். காஷ்மீர் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அதைமீறி காஷ்மீர் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


தடுப்புக்காவலில் இருந்தபோதே அவர் உயிரிழந்துவிட்டார். அப்போது இவரது மரணம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மக்கள் நம்பினர். அன்று அவர் செய்த போராட்டங்கள், செய்த மாபெரும் தியாகத்துக்கு இன்று பலன் கிடைத்துள்ளது இவ்வாறு தினமணி மற்றும் இதர எக்ஸ்பிரஸ் குழும பத்திரிகைகள் உட்பட பல்வேறு ஆங்கில பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News