₹700 கோடியில் அபுதாபியில் பிரம்மாண்ட கோவில்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
By : Sushmitha
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி சென்ற பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்தில் அரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும் அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கூடுதலாக 13.5 நிலத்தை கொடுத்து மொத்தம் 27 ஏக்கர் நிலத்தை சுவாமி நாராயணன் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மேற்கு ஆசியாவில் மிகப்பெரிய இந்து கோவிலாக கட்டப்பட்ட இந்த கோவில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை தங்கும் வசதியில் கட்டப்பட்டுள்ளது. அதோடு நேற்று மகான் சுவாமி மகாராஜ் சிறப்பு பூஜைகளை செய்து இந்த கோவிலை பிரதமர் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பக்தர்கள், பல முக்கிய பிரமுகர்கள் பல நாட்டிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர்.
அதோடு இந்த கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்ட மார்பில்கள் செங்கல் அனைத்துமே ராஜஸ்தானிலிருந்து கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய கோவிலான அபுதாபியில் உள்ள சுவாமி நாராயணனின் கோவிலை கட்டி முடிக்க ரூபாய் 7000 கோடி செலவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Source : Dinamalar