டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 730 பேர் கொரோனாவால் பாதிப்பு - அதிர்ச்சியில் ஜெர்மனி!
டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 730 பேர் கொரோனாவால் பாதிப்பு - அதிர்ச்சியில் ஜெர்மனி!

ஜெர்மனி நாட்டில் உள்ள வெஸ்ட்பாலியா மாவட்டத்தில் இருக்கும் இறைச்சி தொழிற்சாலையில் 730 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்துறைகளில் துணை ஒப்பந்தக்காரர்களை செயல்படுத்துவதை தடை விதித்துள்ளன. ஏனென்றால் துணை ஒப்பந்தக்காரர்கள் அதிகமாக புலம் பெயர் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி அவர்கள் அனைவரையும் ஒன்றாக தங்க வைக்கிறார்கள்.
தற்போது ரைன் வெஸ்ட்பாலியா(Rhine-Westphalia) மாவட்டத்தில் இருக்கும் டோனிஸ் தொழிற்சாலையில் 730 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜெர்மனில் பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
இதை பற்றி ஜெர்மனி நாட்டின் வேளாண் அமைச்சர் ஜூலியா க்ளோக்னர் (Julia Kloeckner) கூறியது: இந்த கொரோனா ஆரம்ப காலத்தை பற்றி விசாரணை நடத்தப்படும் மற்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.