Begin typing your search above and press return to search.
இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை- ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்!
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By : Karthiga
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் எனும் சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மாறாக இயங்கி வரும் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் பொது தடை செய்து வருகிறது. குறிப்பாக பயனாளர் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் தளம் மூலம் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 74 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இதில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை பயனாளர்கள் ரிப்போர்ட் அனுப்புவதற்கு முன்னரே தடை செய்திருப்பதாக கூறியுள்ளது.
SOURCE :DAILY THANTHI
Next Story
