Kathir News
Begin typing your search above and press return to search.

மின்சார வாகனங்களுக்காக 800 கோடி செலவில் 7432 சார்ஜிங் நிலையங்கள் மத்திய மந்திரி தகவல்!

ரூபாய் 800 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்கான 7,432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மதிய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களுக்காக 800 கோடி செலவில் 7432 சார்ஜிங் நிலையங்கள் மத்திய மந்திரி தகவல்!

KarthigaBy : Karthiga

  |  30 March 2023 1:45 AM GMT

கார்பன் கழிவுகள் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அதற்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக நாட்டில் மின்சார வாகனங்கள் பெருகி உள்ளது. பெருகிவரும் வாகனங்கள் தடையில்லா போக்குவரத்தை நடத்த அதற்கு ஜார்ஜிங் நிலையங்கள் அவசியம்.


இதை கருத்தில் கொண்டு பல இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 6586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன இந்நிலைகள் ரூபாய் 800 கோடி செலவில் மேலும் 7432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக மத்திய கனரக தொழில் துறை மந்திரி மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார் .


மின்சார வாகனங்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் 'பேம் இந்தியா' -வின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 560 கோடி முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது .இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் இருந்து மினி பஸ்கள் வரையிலான மின்சார வாகனங்கள் இதில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News