Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளத்தால் பாதிக்காத வீட்டை வடிவமைத்த தமிழக சிறுமி: விருது வழங்கி பாராட்டிய பிரதமர்!

வெள்ளத்தால் பாதிக்காத வகையில் வீட்டை வடிவமைத்த தமிழக சிறுமிக்கு, பிரதமர் மோடி அவர்கள் விருது வழங்கி பாராட்டி உள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்காத வீட்டை வடிவமைத்த தமிழக சிறுமி: விருது வழங்கி பாராட்டிய பிரதமர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jan 2022 2:57 PM GMT

மாணவர்கள் மற்றும் அவர்களுடைய திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி பாராட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விசாலினி என்ற சிறுமி தன்னுடைய திறமையின் மூலம் பிரதமர் மோடி அவர்களின் பாராட்டையும் மற்றும் விருதையும் பெற்றுள்ளார். இந்த சிறு வயதில், வெள்ளத்தில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைப்பு இது எப்படி? என்பதை நிகழ்த்தியுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக சிறுமிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை வழங்கினார்.


வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வகையில் சிறுமி விசாலினி, வீடு ஒன்றை வடிவமைத்துள்ளார். பல்வேறு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களுடைய வீடுகளில் இத்தகைய வெள்ள அபாயத்துக்கு எதிராக தமது உரிமைகளை இழப்பதற்கு வாய்ப்புகளை நேரிடும். அதனைத் தடுக்கும் வகையில் இந்த சிறுமியின் வடிவமைப்பு இருப்பதையும் நினைவுகூரத்தக்கது. இதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி காட்சி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் பிரதமர் மோடி சிறுமி விசாலினியை வாழ்த்தி ஆன்லைன் மூலம் விருது வழங்கினார்.


அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பிரதமரிடம், பரிசு பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக, சிறுமி விசாலினி கூறினார். மேலும் இவர் கண்டுபிடித்துள்ள இந்த பலூன் வடிவமைப்பைக் கொண்ட வீட்டிற்கு தற்பொழுது காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இளம்வயதில் உலக அளவில் இரண்டாவதாக மற்றும் இந்தியாவில் முதலாவதாக சிறு வயதில் காப்புரிமை பெற்ற நபராகவும் அறியப்படுகிறார். தன்னுடைய ஆறாவது வயதிலேயே இத்தகைய சாதனையை நிகழ்த்தி இருக்கும் முதல் மாணவியாக நம்முடைய தமிழக மாநிலத்தைச் சேர்ந்த மாணவியாக அமைந்திருப்பது மிகவும் பெருமை படவேண்டிய விஷயம் தான்.

Input & Image courtesy: Twitter post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News