Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 80% பேருக்கு அறிகுறி இல்லை - இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 80% பேருக்கு அறிகுறி இல்லை - இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 80% பேருக்கு அறிகுறி இல்லை -  இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 11:28 AM GMT

இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் உறுதி செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 543 உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் உள்ளன எனவும் இது துன்பமிக்கது எனவும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 70 முதல் 75 சதவீதம் பேருக்கு தொற்றின் அறிகுறி இல்லை என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.

அதேபோல் டெல்லியில் நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கும் அறிகுறி எதுவும் இல்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dinamani.com/india/2020/apr/20/80-of-people-without-symptoms-corona-confirmed-icmr-3403970.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News