பிரதமர் மோடி எடுத்த "21 நாள் முடக்கம்" என்ற முடிவிற்கு 80% இந்திய மக்கள் ஆதரவு.. சுவாரசியமான ஆய்வு முடிவுகள்..
பிரதமர் மோடி எடுத்த "21 நாள் முடக்கம்" என்ற முடிவிற்கு 80% இந்திய மக்கள் ஆதரவு.. சுவாரசியமான ஆய்வு முடிவுகள்..

வுஹான் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து, மார்ச் 18 முதல் 24 வரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,000 க்கும் மேற்பட்டவர்களை தொலைபேசி உரையாடல்கள் மூலம் ஆய்வு செய்தது ஜான் கி பாத் அமைப்பு.
"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொது சுகாதார சவாலைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க, அவர்களின் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாங்கள் மக்களிடம் கேட்டோம்" என்று தெரிவித்தது ஜான் கி பாத் அமைப்பு.
தொற்றுநோய் தொடர்பாக தேசத்தின் மனநிலை குறித்து சில சுவாரஸ்யமான தரவுகளை இந்த ஆய்வு எடுத்துள்ளது. தொற்றுநோயை பரப்புவதை எதிர்த்து அரசாங்கத்தின் நடவடிக்கையை 80% சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஆதரித்துள்ளனர். 80% சதவிகிதத்திற்கும் அதிகமானோர் LockDown அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்கின்றனர்.
ஆனால் பொருளாதாரத்தை குறித்து அச்சத்துடன் உள்ளனர். தொற்றுநோயின் விளைவாக பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று 61% சதவீதம் பேர் உணர்ந்தனர். சுவாரஸ்யமாக, தொற்றுநோய்க்கு பின்னால் ஒரு சீன சதித்திட்டம் இருப்பதாக குறைந்தது 47% பேர் சந்தேகித்தனர்.
வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்க படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 42% சதவீதம் பேர் சோப்பு அல்லது சானிட்டீசரைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறை கூட தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்வதில்லை. 38% சதவீதம் பேர் ஒரு முறை வெளியே சென்றார்கள். பதிலளித்தவர்களில் 80% சதவிகிதத்தினர் நோயின் அறிகுறிகளை அறிந்திருந்தனர். 70% சதவிகிதத்தினர் தாங்கள் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று நம்புகிறார்கள்.
41% சதவீதம் பேர் தொற்றுநோய் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து பெறுகின்றனர். இந்தியாவில் தொற்றுநோய் நெருக்கடி இன்னும் மோசமாகிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றும் கணக்கெடுப்பு காட்டுகிறது. 56% சதவீதம் பேர் இந்த நோய் மேலும் பரவினால், அது இந்திய சுகாதார அமைப்புக்கு சுமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். நாட்டில் நிலைமை மோசமடையக்கூடும் என்று 65% சதவீதத்திற்கும் அதிகமானோர் நம்புகின்றனர்.
கணக்கெடுப்பின் முடிவுகள் நாட்டின் அனைத்து பகுதிகளும் தொற்றுநோயை தீவிரமாக எடுத்துக்கொள்கின்றன என்பதைக் காட்டுகின்றன. நோயின் அறிகுறிகளை மக்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் இது குறித்து எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாடு மிகுந்த ஆதரவளிக்கிறது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.