Kathir News
Begin typing your search above and press return to search.

800 ஆண்டு பழமையான விநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ கல்லறை தோட்டம்! நெல்லையில் கிறிஸ்தவர்கள் அடாவடி!!

800 ஆண்டு பழமையான விநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ கல்லறை தோட்டம்! நெல்லையில் கிறிஸ்தவர்கள் அடாவடி!!

800 ஆண்டு பழமையான விநாயகர் கோயில் முன்பு கிறிஸ்தவ கல்லறை தோட்டம்! நெல்லையில் கிறிஸ்தவர்கள் அடாவடி!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sept 2019 4:30 PM IST



கிறிஸ்தவர்கள், இந்துக்களை மதம் மாற்ற பல்வேறு பித்தலாட்டங்களை அரகேற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்துக்கள் வாழும் பகுதிகளில் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவர்கள் திடீர் சர்ச்சுகளை கட்டி மதம் மாற்றும் வேலையை ஜரூராக செய்து வருகின்றனர.


கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளை மதம் மாற்றுவது, அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளை மதம் மாற்றுவது, இந்துக்களின் வீடுகளில் சென்று மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுவது போன்று பல வழிகளில் மதமாற்ற வேலையில் கிறிஸ்தவர்கள தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க, இந்து கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது, பின்னர் அதில் சர்ச்சுகளை கட்டி இந்துக்களை மதம் மாற்றுவது போன்ற வேலைகளிலும் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.





இவை அனைத்துக்கும் மேலாக, இந்து கோயில் முன்பு கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டம் அமைத்து, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் அராஜகத்தில் இப்போது ஈடுபட்டு உள்ளனர்.


திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம் கிராமம். இங்கு விநாயகப்பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோயிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி தருகிறார்.


விநாயகர், தன்னுடைய 32 தோற்றங்களில் 8-வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.


800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக்கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.


8 நிலை மண்டபங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோயிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.


இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகியன தல விருட்சங்களாக உள்ளன.


சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில், எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.


விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், கணவன்-மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்வதன் மூலம், உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.


இந்த கோயிலில் சித்திரை மாதம் முதல் நாள், சூரிய பகவான் நேரில் விநாயகரை வழிபடும் அபூர்வ நிகழ்வும் ஆண்டுதோறும் நடக்கிறது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விநாயகரட கோயில் முன்பு, கிறிஸ்தவர்கள் அடாவடியாக கல்லறை தோட்டம் அமைத்துள்ளனர். ஏ.ஜி.எஸ் சபையை சேர்ந்த கிறிஸ்தவ கும்பல்கள் இந்த வேலையை செய்துள்ளன.




https://twitter.com/Kunthavi5/status/1171559573058019329?s=08



இது இந்துக்களை கொதிப்படைய செய்துள்ளது. வேண்டும் என்றே இந்து கோயில் முன்பு அபசகுணமாக கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைத்து இருந்தும், இந்த கோயிலை நிர்வகித்து வரும் இந்து அறநிலையத்துறை இதை அகற்ற ஒரு துரும்பைகூட எடுத்து போடவில்லை என்பது வேதனையான உண்மை.


எனவே, இந்து அறநிலையத்துறையும், தமிழக அரசும் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தை மூடி, மத மோதலை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News