Kathir News
Begin typing your search above and press return to search.

800 ஆட்டுக்குட்டிகள் சீன தூதரகத்துக்குள் புகுந்தது - இந்தியாவை அவமதிக்க நினைத்து அவமானத்தால் மூக்குடைந்து மண்டியிட்ட சீனா!

800 ஆட்டுக்குட்டிகள் சீன தூதரகத்துக்குள் புகுந்தது - இந்தியாவை அவமதிக்க நினைத்து அவமானத்தால் மூக்குடைந்து மண்டியிட்ட சீனா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jun 2020 12:22 PM GMT

மேற்கு இமயமலையில் இந்தியாவுடன் எல்லை மோதல் நடந்த இடத்திற்கு அருகில் சீனா புதிய கட்டமைப்புகளை அமைப்பதாக தெரிய வநதுள்ளது. புதிய செயற்கைக்கோள் படங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளன. இந்த நிலையில் சீனா விவகாரத்தில் தொடர்புடைய சுவாரஸ்யமான வரலாற்று சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1965 ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் எங்களுக்குச் சொந்தமான 800 ஆடுகள் மற்றும் 59 திபெத்திய ஆடுகளை திருடிவிட்டனர் என்று சீனா குற்றம்சாட்டியது. ஆனால், உண்மையான காரணம், சிக்கிமை கபளிகரம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தது.

இந்திய வீரர்கள் ஆடுகளை திருடி விட்டதாக சீனா குற்றம் சாட்டியதையடுத்து, அப்போது ஜன் சங்கத் தலைவராக இருந்த வாஜ்பாய், சீனாவுக்கு பாடம் புகட்ட முடிவெடுத்தார்.

இதற்கு வாஜ்பாயின் நகைச்சுவை உணர்வும் உதவியது. கிட்டத்தட்ட 800 ஆட்டுக்குட்டிகளை வாங்கிய வாஜ்பாய் அவற்றை டெல்லி சீன தூதரகத்துக்குள் துரத்தி விட்டார். 'ஆடுகளின் கழுத்தில் என்னை சாப்பிடுங்கள், ஆனால் உலகை காப்பாற்றுங்கள்!' என்று எழுதப்பட்ட பதாகைகள் தொடங்க விடப்பட்டிருந்தன.

அப்போது, இந்திய பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தார். கோபமடைந்த சீன அரசு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியது. 'உங்கள் செயலால் சீன மக்களை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்கள் ஆதரவின்றி இந்த செயல் நடந்திருக்க முடியாது' என்று கடும் கண்டனத்தை தெரிவித்தது .

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு கடிதம் எழுதிய சாஸ்திரி அரசு, 'டெல்லி மக்கள் அமைதியாக 800 ஆடுகளுடன் போராட்டம் நடத்தினர். அமைதியாக நடந்த இந்த போராட்டத்துக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்தியாவுக்கு எதிராக போர் அச்சுறுத்தலை விடுக்கும் சீன அரசுக்கு எதிராக டெல்லி மக்கள் நகைச்சுவையாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்'' என்று பதில் கூறியது.

பிறகு 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. இந்தியாவுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப் போவதாக கொக்கரித்தது. சிக்கிம் எல்லையில் நாதுலா பகுதியில் இரு நாட்டுக்கும் போர் மூண்டது.

போரில் 340 சீன வீரர்களை இந்தியா வேட்டையாடியது. சீனா தோற்று மூக்குடைப்பட்டு ஓடியது. இந்திய தரப்பில் 88 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையிலிருந்து, பாடம் படித்த சீனா அதற்குப்பிறகு , 48 ஆண்டுகளாக இந்தியாவிடம் பெரியளவில் வாலாட்டியதில்லை.

Credit: Polimer News

இந்தி பதிப்பில்: https://navbharattimes.indiatimes.com/india/india-china-border-stand-off-in-1965-atal-bihari-vajpayee-drove-800-sheep-to-chinese-embassy-in-delhi/articleshow/76639066.cms?story=2

Next Story
கதிர் தொகுப்பு
Trending News