தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 8,300 கோடி ஊக்கத்தொகை!
உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 8300.கோடி ஊக்கத்தொகை வழங்கி உள்ளது.
By : Karthiga
உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ரூபாய் 8300 கோடி தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விரிவான செய்தியாவது:-
நாட்டில் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது .இந்தியாவின் முக்கிய தொழில்துறை கொள்கையான இத்திட்டத்தில் மின்னணு பொருட்கள் ட்ரோன்கள் உள்ளிட்ட 14 துறைகளின் தயாரிப்புகள் அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் 8,300 கோடி ஊக்கத்தொகையாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டு துறையின் மூத்த அதிகாரி ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ,உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்திய பின் கிட்டத்தட்ட 1.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதை தொடர்ந்து இந்நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 8300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊக்கத்தொகை வளங்களும் தற்போது அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3 முதல் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன .மொபைல் போன் மின்னணு மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் தயாரிப்பு அதிகரித்துள்ளது. ஜவுளி மற்றும் சிறப்பு உருக்குத் துறைகள் சிறிய பின்னடைவை காண்கின்றன.இதன் காரணமாக அவற்றின் ஊக்கத்தொகை குறையக்கூடும். இத்திடத்தை அரசு தொடர்ந்து மதிப்பிட்டு வருகிறது .அந்த வகையில் ஊக்கத்தொகையை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
SOURCE :Kaalaimani.com