Kathir News
Begin typing your search above and press return to search.

85 நாடுகளுக்கு ஏற்றுமதி.. 30 மடங்கு அதிகரிப்பு.. பட்டையை கிளப்பும் மோடி அரசு..

85 நாடுகளுக்கு ஏற்றுமதி.. 30 மடங்கு அதிகரிப்பு.. பட்டையை கிளப்பும் மோடி அரசு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 July 2024 3:50 PM GMT

ஏற்றுமதியில் இந்தியா தற்போது அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா போன்ற மோடி அரசின் திட்டத்தின் கீழ் நாளுக்கு, நாள் இந்தியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் எண்ணிக்கையும், அதனுடைய மதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ராணுவ தளவாடங்களை 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் 10 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை சார்பில் கூறும் பொழுது, கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் இந்திய ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.686 கோடியாக இருந்தது. தற்போது கடந்த நிதியாண்டில்(2023-24) ரூ.21,083 ஆக அதிகரித்து உள்ளது. இது 30 மடங்கு அதிகரிப்பாகும். நாட்டின் பாதுகாப்புத்துறை வடிவமைப்புகள் மற்றும் மேம்பாட்டு திறனை வெளிப்படுத்தி உள்ளன. இதன் காரணாக தென்கிழக்கு ஆசியா, மத்தியகிழக்கு, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.


ஏவுகணைகள், ரேடார்கள், கடற்படை அமைப்புகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவை ஏற்றுமதியில் இடம்பெற்றுள்ள முக்கிய கருவிகளாகும். ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் வாங்கி உள்ளது மற்றொரு பெரிய சாதனையாக உள்ளது. ஏற்றுமதி சந்தையை பூர்த்தி செய்வதில் கடற்படை அமைப்புகளும் முக்கிய பங்கு கொண்டு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் போன்ற மேம்பட்ட தளங்கள் இந்த பிரிவில் சாதனையை எடுத்துக்காட்டுகின்றன.


2023-24ல் உற்பத்தியின் மொத்த மதிப்பில், சுமார் 79.2 சதவீதம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 20.8 சதவீதம் தனியார் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. லார்சன் & டூப்ரோ, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் தனியார் துறைகளில் முக்கியமானவையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. மேக் இன் இந்தியா போன்ற பல கொள்கை முயற்சிகளை மோடி அரசு எடுத்துள்ளதும் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்" என்று அந்த அறிக்கையில் பாதுகாப்பு துறை கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறது.

Input & Image courtesy:Swarajya News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News