என்னால முடிஞ்சது 3 ஆயிரம் தான் சாமி - 85 வயதான மூதாட்டி முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார், நெகிழ வைக்கும் சம்பவம்.!
என்னால முடிஞ்சது 3 ஆயிரம் தான் சாமி - 85 வயதான மூதாட்டி முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார், நெகிழ வைக்கும் சம்பவம்.!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்யும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகளவு முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி பல்வேறு நிறுவனங்கள்,மாணவர்கள் என பலரும் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பணஉதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த 85 வயதான மூதாட்டி தையல்நாயகி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனக்கு வந்த முதியோர் உதவித்தொகை 3000 ரூபாயை அளிக்க புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கடந்த வெள்ளி அன்று வந்தார். அப்போது முதல்வர் அலுவலகத்தில் பணமாக வாங்க முடியாது காசோலையாக அளிக்க வேண்டும் எனக்கூறிய நிலையில் வங்கிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை என்பதால் தான் கொண்டு வந்த 3000ரூபாயை முதல்வரிடம் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றார்.
மீண்டும் திங்கள் அன்று வந்து தனது தொகையை அளிப்பேன் எனவும் அவர் கூறிச்சென்ற நிலையில் இன்று மீண்டும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த மூதாட்டி தையல்நாயகி முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தனது முதியோர் உதவித்தொகை 3000ரூபாக்கான காசோலையை அளித்தார்
அப்போது முதல்வரிடம் தொலைக்காட்சியில் பல மக்கள் நிதி அளிப்பதை பார்த்து தன்னால் முடிந்த இந்த தொகையை அளிக்க வந்ததாக கூறினார்.