வேலையே செய்யாமல் 'சோம்பேறியாக' படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு 88 ஆயிரம் பரிசு அறிவிப்பு- அதிசய போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் நாடு
வேலையே செய்யாமல் 'சோம்பேறியாக' படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு 88 ஆயிரம் பரிசு அறிவித்து ஒரு நாடு அதிசய போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது அது பற்றி காண்போம்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு மாண்டினீக்ரோ இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் வினோதமான போட்டியை நடத்தி வருகிறது. கற்க கசடற என்ற படத்தில் வரும் வடிவேலு காமெடி போல எதுவுமே செய்யாமல் மெத்தையில் சும்மா படுத்து கிடக்க வேண்டும் என்பதே அந்த போட்டியின் முக்கிய நிபந்தனையாகும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு ,குளிர்பானம் போன்ற சகல வசதிகளும் அந்த தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் .
அதேபோல் லேப்டாப், செல்போன், புத்தகம் போன்றவற்றையும் படுத்து கொண்டே பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிட இடைவெளி மட்டும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். அப்போது அவர்கள் கழிப்பறை சென்று கொள்ளலாம். ஆனால் படுத்திருக்கும் போது தெரியாமல் எழுந்து விட்டால் கூட போட்டியை விட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு சோம்பேறி குடிமகன் என்ற பட்டமும் ஆயிரம் யூரோவும் பரிசாக வழங்கப்படுகிறது.
SOURCE :DAILY THANTHI