Kathir News
Begin typing your search above and press return to search.

90 - களில் நடித்த குழந்தை நட்சத்திரம் இவர் தானா? - அடையாளமே தெரியல.!

90 - களில் நடித்த குழந்தை நட்சத்திரம் இவர் தானா? - அடையாளமே தெரியல.!

90 - களில் நடித்த குழந்தை நட்சத்திரம் இவர் தானா? - அடையாளமே தெரியல.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 3:02 AM GMT

தமிழ் திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல் இந்திய திரைப்படத் துறைக்கும் 1990ல் வந்த படங்கள் மிகப்பெரிய ஒரு பொற்காலமாக பலராலும் கருதப்படுகிறது. 90 களில் தமிழ் திரைப்படத்துறையில் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த குழந்தை நட்சத்திரத்தை பற்றி நாம் இங்கு காண்போம். மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மகேந்திரன்.

தனது மூன்று வயதிலேயே நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் ஆறு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார் இந்தச் சுட்டிக் குழந்தை. மேலும் நாட்டாமை படத்தில் பஞ்சாயத்து காட்சியில் சாட்சி சொல்லும் சிறுவனாக இவர் நடித்த காட்சி இன்றளவும் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

மகேந்திரன் 2013ஆம் ஆண்டு வெளியான விழா என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நம் அனைவரையும் கவர்ந்த மாஸ்டர் மகேந்திரன், ஹீரோ மகேந்திரனாகவும் நம் அனைவரையும் ரசிக்க வைப்பார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News