வங்கிக்கு திரும்பிய 97 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள்!
வாபஸ் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டன.
By : Karthiga
2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த மே 19-ஆம் தேதி அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர் இந்த கால அவகாசம் அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது ரூபாய் மூன்று லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ஆம் தேதி நிலவரப்படி 97.83 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. மீதி 9330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடியாகும். அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலர்களில் நேரடியாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI