Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசில் 9.75 லட்சம்காலிப் பணியிடங்கள் நாடாளுமன்றத்தில் தகவல்

மத்திய அரசில் ஒன்பது லட்சத்தி 79 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசில் 9.75 லட்சம்காலிப் பணியிடங்கள் நாடாளுமன்றத்தில் தகவல்

KarthigaBy : Karthiga

  |  30 March 2023 5:30 AM GMT

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ரயில்வேயில் 2 லட்சத்து 93 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. பாதுகாப்புத் துறையில் 2 லட்சத்து 64 ஆயிரம் காலிடங்களும் உள்துறையில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் காலியிடங்களும் வருவாய் துறையில் 80 ஆயிரத்து 243 காலி இடங்களும் உள்ளன. காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு மேளாக்களும் அதற்கு பயன்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார் .மற்றொரு கேள்விக்கு ஜிதேந்திர சிங் அளித்த பதில் வருமாறு:-


ஊழல் தடுப்பு பணி குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. ஊழலை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்ட பொதுத்துறையில் ஊழலை ஒடுக்க தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார் .மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உணவு மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-


பட்டினி காரணமாக யாராவது இறந்ததாக எந்த ஒரு மாநிலமும் யூனியன் பிரதேசமோ தகவல் தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது விநியோகத் துறை கணினி மயமாகத்தால் சரியான பயனாளிகளுக்கு உணவு தானியம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 19 கோடியே 50 லட்சம் ரேஷன் கார்டுகளும் 100% ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன இவ்வாறு அவர் அவர் கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் ரயில்வே மந்திரி அஸ்வினி வேஷம் கூறியதாவது:-

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கிசான் ரயில் சேவை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி 167 வழிதடங்களில் 2364 கிசான் ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜய சாய் ரெட்டி ,இனிமேல் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதா? என்று கேட்டார். அதற்கு மதிய உள்துறை மந்திரி நித்யானந்தராய் நேரடி பதிலை தெரிவிக்கவில்லை. 14வது நிதி கமிஷன் வரி பகிர்வில்பொதுப்பிரிவு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கும் இடையே பாகுபாடு காட்டவில்லை என்று கூறினார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்டர் கூறியதாவது:-


கடன் 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் சிறைகளில் 472 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் .அதிகளவாக 67 மரண தண்டனை கைதிள் உள்ளனர். மேலும் 290 கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News