Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான அடையாளம்: வாரணாசியில் ரூ.451 கோடி செலவில் கிரிக்கெட் அரங்கு !

வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் என்று பேசினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான அடையாளம்: வாரணாசியில் ரூ.451 கோடி செலவில் கிரிக்கெட் அரங்கு !
X

KarthigaBy : Karthiga

  |  24 Sept 2023 12:30 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் கட்டப்படுகிறது. ரூபாய் 451 கோடி செலவில் கட்டப்படும் இந்த கிரிக்கெட் அரங்கத்திற்கு நேற்று நடைபெற்ற விழாவில் மோடி அடிகள் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-


நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம். நாட்டின் மரியாதை குறித்த விஷயத்திலும் அது மிகவும் முக்கியம். முக்கிய சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்காகவே உலகில் பல நகரங்கள் பெயர் பெற்றுள்ளன. அதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு மையங்களை நம் நாட்டிலும் உருவாக்க வேண்டும். இந்த கிரிக்கெட் அரங்கு வெறுமனே செங்கல், கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டதாக அல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்தின் மகத்தான அடையாளமாக திகழும்.


நாட்டில் விளையாட்டு குறித்த மனோ பாவம் மாறி உள்ளது. விளையாட்டை உடல் தகுதி, வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர்களின் பணி வாழ்வுக்கு தொடர்புடையதாக அரசு மாற்றி உள்ளது. அதனால் விளையாட்டு துறையில் இந்தியா வெற்றிகள் குவித்து வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு நினைவுடன் ஒப்பிடும் பொழுது விளையாட்டுத்துறைக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


கேலோ இந்தியா விளையாட்டுக்கும் கடந்த ஆண்டை விட 70 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . நம் நாட்டின் மூளை முடுக்குகள், சிறு கிராமங்களில் விளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை. அங்குள்ள வீராங்கனைகளை கண்டறிந்து நாம் பட்டியலிட வேண்டும். ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நமது வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News