Kathir News
Begin typing your search above and press return to search.

மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்துச் சென்ற டிரைவரால் பரபரப்பு - டெல்லியில் மீண்டும் கொடூர சம்பவம்

டெல்லி மகளிர் அணைய தலைவியை காரில் இழுத்துச் சென்ற சம்பவம் மீண்டும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்துச் சென்ற டிரைவரால் பரபரப்பு - டெல்லியில் மீண்டும் கொடூர சம்பவம்

KarthigaBy : Karthiga

  |  20 Jan 2023 6:45 AM GMT

தலைநகர் டெல்லியில் கடந்த 1ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் மீது கார் மோதியது. பின்னர் அந்த இளம்பெண் அந்த காரிலேயே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த கொடூர செயலை அரங்கேற்றியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாதக செயலின் பரபரப்பு மறைவதற்குள் நேற்று மற்றுமொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் மாநில மகளிர் ஆணைய தலைவியே காரில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவியாக இருப்பவர் சுவாதி மாலிவால். இவர் நேற்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் தனது குழுவினருடன் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இருந்தார் . அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் சுவாதி மாலிவால் அருகே காரை நிறுத்தி அதில் ஏறுமாறு கூறினார். ஆனால் சுவாதி மாலிவால் அதற்கு மறுத்தார். இதனால் கோபத்தில் வேகமாக அங்கிருந்து கிளம்பி சென்ற அந்த நபர் பின்னர் மீண்டும் காரை திருப்பிக் கொண்டு அங்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுவாதி மாலிவால் அவரை கண்டிப்பதற்காக காரின் டிரைவர் இருக்கைக்கு அருகே சென்றார் . அத்துடன் கையை நீட்டி அவரை கண்டித்தார். உடனே அந்த நபர் கண்ணாடியை மேலே உயர்த்தினார். இதில் சுவாதி மாலிவாலின் கை அதில் சிக்கிக்கொண்டது.


உடனே அவர் காரை அங்கிருந்து கிளப்பி சென்றார் இதனால் சுமார் 15 அடி தூரம் வரை சுவாதிமல்லி வாழும் எழுத்துச் செல்லப்பட்டார். உடனே சுதாரித்து கொண்ட சுவாதிமாலிவால் கையை வேகமாக இழுத்து விட்டு தப்பினார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் அதிர்ச்சியில் உறைந்தவாரே அங்கேயே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் அங்கே சுவாதி மால் நிற்பதை பார்த்து காரணம் கேட்டனர். அவரும் தனக்கு நேர்ந்த பயங்கர சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு அந்த காரை மடக்கினார். பின்னர் அதை ஓட்டி வந்தவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சந்திரா என தெரியவந்தது.


அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சுவாதி மாலிவால் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார். அதில் அவர் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலமை குறித்து நேற்று இரவு ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் டிரைவர் போதையில் என்னை துன்புறுத்தினார். நான் அவரை பிடித்த போது அவர் கார் கண்ணாடியை உயர்த்தி என் கையை பிடித்து இழுத்துச் சென்றார். டெல்லியில் மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யலாம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News