Kathir News
Begin typing your search above and press return to search.

அலட்சியமாக நடந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் - எதற்கு தெரியுமா?

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பபுகளை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதமாக ரூ.25000

அலட்சியமாக நடந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் - எதற்கு தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  2 Aug 2022 7:30 AM GMT

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது .

இது குறித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல கோர்ட் உத்தரவை அமல்படுத்தா கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டபோதும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது இல்லை .இது அதிருப்தி அளிக்கிறது.

நீதிமன்ற உத்தரவை பத்து நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன் கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் , அவர்களை ஊதியம் பெற அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை பத்து நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News