Kathir News
Begin typing your search above and press return to search.

கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி கோரிக்கை!

கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு பிரம்மாண்ட சிலை வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி கோரிக்கை!

KarthigaBy : Karthiga

  |  4 April 2023 1:00 AM GMT

இந்திய குடியரசு கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


எங்களது தேசிய செயற்குழு கூட்டத்தில் 2024 தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் ஆதரவளிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். ராகுல்காந்தி இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று சொல்லுகிறார் .அப்படி என்றால் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது எப்படி? உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியான பிறகு ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. ஆனால் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காளத்தில் கலவரம் நடக்கிறது . பா.ஜ.க சிறுபான்மையினருக்கான கட்சி அதனால் தான் கடந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு எட்டு சதவீத சிறுபான்மையினர் வாக்களித்து இருந்தார்கள்.


ராகுல் காந்தியின் தகுதி நீக்க முடிவை பா.ஜ.க வோ மத்திய அரசோ எடுக்கவில்லை . அதுநாடாளுமன்ற செயலகம் எடுத்த முடிவு .சமூகத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சட்டம் இயற்றிய அம்பேத்கருக்கு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பெரிய அளவிலான சிலை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுகிறேன்.


தமிழகத்தில் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இந்திய குடியரசு கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்கிறது. 2024 தேர்தலில் அதிமுக பா.ஜ.க இந்திய குடியரசு கூட்டணி கட்சி தமிழகத்தில் வலுவானதாக இருக்கும். அதிக இடங்களையும் பிடிக்கும். தலித்துகள் மீதான தாக்குதலையை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.


இது தமிழ்நாடு .ஜம்மு காஷ்மீர் இல்லை. தென்னிந்தியாவின் முக்கியமான மாநிலம் .அதனால் வட இந்தியர்கள் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது நல்ல விஷயம் இல்லை. இந்த விஷயத்தில் மு.கஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார். அப்போது இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் எம்.ஏ. சூசை உடன் இருந்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News