Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவிலுக்கு எட்டு நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரத்தை பரிசாக வழங்கிய லக்னோ காய்கறி வியாபாரி!

லக்னோவில் எட்டு நாடுகளில் நேரத்தை காட்டும் கடிகாரத்தை காய்கறி வியாபாரி தயாரித்துள்ளார். அவரது அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கினார்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு எட்டு நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரத்தை பரிசாக வழங்கிய லக்னோ காய்கறி வியாபாரி!
X

KarthigaBy : Karthiga

  |  1 Jan 2024 11:15 AM GMT

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஹானிமன் கிராசிங் பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி விற்பனை செய்து வருபவர் அணில் குமார் சாகு. இவர் வித்தியாசமான கடிகாரத்தை தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவர். கடந்த 2018- ஆம் ஆண்டு வருடம் ஒரே நேரத்தில் இந்தியா, சீனா, துபாய் மாஸ்கோ மற்றும் டோக்கியோவின் நேரங்களை காட்டும் கடிகாரத்தை தயாரித்தார். இந்த கடிகாரத்துக்கு மத்திய அரசின் காப்புரிமை அலுவலக வடிவமைப்பு பதிவு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த நிலையில் வியாபாரி அனில்குமார் சாகு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி அந்த கோவில் அறக்கட்டளையான ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ராவுக்கு புதிதாக ஒரு கடிகாரத்தை தயாரித்து பரிசளிக்க முடிவு செய்தார் .அதன்படி எட்டு நாடுகளில் நேரத்தை காட்டும் ஒரு வித்தியாசமான கடிகாரத்தை தயார் செய்ய திட்டமிட்டார்.


அதன்படி 8 நாடுகளின் நேரத்தை காட்டும் ஒரு வித்தியாசமான கடிகாரத்தை தயார் செய்ய திட்டமிட்டார். இதற்கான பணியை கடந்த அக்டோபர் மாதம் நவராத்திரியின் போது தொடங்கினார். நீண்ட முயற்சிக்கு பின்னர் 75 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த கடிதத்தை அவர் உருவாக்கினார். அந்த கடிகாரம் இந்தியா, துபாய் , சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் ஜப்பானின் டோக்கியோ நகரம் ரஷ்யாவின் மார்க்கோ, சீனாவின் பீஜிங் நகரம், அமெரிக்காவில் வாஷிங்டன் நியூயார்க் நகரில் நேரத்தை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அந்த கடிகாரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராயிடம் அனில் குமார் சாகு வழங்கினார். முன்னதாக அவர் தயாரித்து தனது கடையில் வைத்திருந்த அந்த கடிகாரத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். இது பற்றி அனில் குமார் சாஹூ கூறியதாவது :-

லக்னவில் உள்ள காது ஷியாம் கோவில் உட்பட சில இடங்களுக்கு இதுபோன்ற கடிகாரங்களை பரிசாக வழங்கியுள்ளேன். எதிர்காலத்தில் 25 நாடுகளின் நேரத்தை காட்டும் கடிகாரத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளேன். இது போன்ற ஒரு கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேசம் முதல்முதல் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பரிசாக வழங்க உள்ளேன்.


75 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட கடிகாரத்தை தயாரிக்க 3 ஆயிரம் செலவாகிறது .அதை செய்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது . இது போன்ற கடிகாரங்களை வணிகரீதியாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். ஆனால் போதிய பண வசதி இல்லாததால் இதை செய்ய முடியவில்லை. தனது வீட்டு உரிமையாளருடன் நேர பயன்படுதி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது இந்த கடிகார தயாரிப்பு எண்ணம் தோன்றியது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News