Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் நடுரோட்டில் ஓடஓட வெட்டி ஒருவர் படுகொலை - அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள்! கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!

சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவரை சாலையில் ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடுரோட்டில் ஓடஓட வெட்டி ஒருவர் படுகொலை - அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள்! கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 May 2022 6:00 PM IST

சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவரை சாலையில் ஓட ஓட விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் நேற்று மதியம் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு பைக்கில் வந்த சிலர் ஆறுமுகத்தை வழிமறித்தனர் பின்னர் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனால் அவரது தலையில் பலமாக வெட்டப்பட்டிருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வெட்டி படுகொலை செய்யும் காட்சிகள் அங்கு இருந்து ஒருவர் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த வீடியோ தற்போது இணையங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இது குறித்த விசாரணையில் அருகாமையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சி.சி.டி.வி காட்சி தற்போது இணையங்களில் வைரலாக வெளியாகின்றது.

பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவரை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்யும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, சென்னை போன்ற தமிழகத்தின் தலைநகரில் இந்த மாதிரி நிலைமை என்றால் மற்ற ஏரியாக்களில் எந்த மாதிரி இருக்கும் என்ற பயமும் மக்களிடையே நிலவி வருகிறது. சமீபகாலமாக கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News