Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டுப்புழுக்களை கொல்லாமல் புதிதாக ஒரு 'கருணை பட்டு' - ஒடிசாவில் அறிமுகம்

பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே பட்டு தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஒடிசாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

பட்டுப்புழுக்களை கொல்லாமல் புதிதாக ஒரு கருணை பட்டு - ஒடிசாவில் அறிமுகம்

KarthigaBy : Karthiga

  |  25 Nov 2023 1:21 PM GMT

பெண்கள் விரும்பி அணியும் அழகிய பட்டுப் புடவைகளுக்கு பின்னே ஒரு சோகம் புதைந்துள்ளது. அதாவது ஒரு பட்டுப்புடவை தயாரிப்பதற்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. பட்டுப்புழுக்கள் உருவாக்கும் கூட்டில் இருந்து பட்டு இழைகளை பெறுவதற்கு வெந்நீர் அல்லது நீராவியால் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. இல்லாவிட்டால் பட்டுப்புழு பூச்சியாகி கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறிவிடும். அதனால் பட்டு இழைகள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்து விடும்.


ஆனால் அவ்வாறு பட்டு பூச்சி வெளியேறிய பிறகும் உள்ள பட்டு இழைகளை பயன்படுத்தி பட்டு ஆடைகளை உருவாக்கும் நுட்பத்தை ஒடிசா மாநில கைத்தறி ஜவுளி மற்றும் கைவினைத் துறை உருவாக்கியுள்ளது. 'கருணை பட்டு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பட்டு பலதரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியிலும் ஒடிசா அரங்கில் இது பலரை ஈர்த்ததாகவும் அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News