Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் புதிய கட்சி விரைவில் அறிவிப்பு!

பா.ஜ.க.வுடன் த.மா.க கூட்டணி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் புதிய கட்சி விரைவில் அறிவிப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  18 Feb 2024 5:45 PM GMT

லோக்சபா பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது .இத்தகைய சூழலில் அ.தி.மு.க பா.ஜ.க இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது.


அதே சமயம் த.மா.கா தலைவர் ஜி.கே வாசனிடம் செய்தியாளர்கள் அதிமுக பா.ஜ.க இடையே மீண்டும் கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர் 15 நாட்களுக்கு முன்பே ஒருமுறை எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினேன். அப்போது அதிமுக த.மா.க கூட்டணிக்காக பேசாவிட்டாலும் நாட்டு நலன் எதிரிகளை வீழ்த்துவது குறித்து பேசினேன் என்று கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள்.


எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடமும் வலியுறுத்தினேன். அ.தி.மு.க பாஜக கூட்டணி முறிந்த பிறகு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் எனவும் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்தால் தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியும் எனவும் த.மா.க கூறி வருகிறது என்றார். இந்த நிலையில் அ.தி.மு.க.வை பா.ஜ.க கூட்டணியில் இணைக்க ஜி.கே வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் லோக்சபா தேர்தலில் பா.ஜ - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பா.ஜ கூட்டணியில் ஏற்கனவே இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :maduraimani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News