Kathir News
Begin typing your search above and press return to search.

பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரிய புயல் - செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!

பூமியை சக்தி வாய்ந்த சூரிய புயல் தாக்கியதால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரிய புயல் - செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  12 May 2024 10:40 AM GMT

சூரியனின் மேற்பரப்பில் இருந்து கிளம்பும் மின்காந்த விடுப்புகள் மற்றும் சக்தி வாய்ந்த ஆற்றல்கள், சூரிய புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரிய புயல் புவி மற்றும் அதன் காந்த மண்டலம் உள்ளடக்கிய முழு சூரிய மண்டலத்தையும் தாக்கும். இந்த நிலையில் கடத்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. ஏற்கனவே இது தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க கடல் வளிமண்டல ஆய்வகம் தெரிவித்திருந்தது .பூமியை கடும் சூரியகாந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் தெரிவித்தது.

துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும் பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதன்படி வானத்தில் கண்கவர் வானொளி காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாலின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.விவர்பூல்,கென்ட், நார்போக் உட்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரிய புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா கனடா, ஸ்காட்லாந்து வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது. இதைப் பார்த்து மக்கள் பரவசம் அடைந்தனர். சூரிய புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Varalaru

Next Story
கதிர் தொகுப்பு
Trending News