Kathir News
Begin typing your search above and press return to search.

தனக்கு வேலை கிடைத்ததை போஸ்டர் ஒட்டி நகைச்சுவை உணர்வால் தெறிக்க விட்ட பேராசிரியர்!

வேலை கிடைச்சாச்சு என்று ஒரு பேராசிரியர் அரசியல்வாதி போல போஸ்டர் ஒட்டி அமர்க்களப் படுத்தியுள்ளார்.

தனக்கு வேலை கிடைத்ததை போஸ்டர் ஒட்டி நகைச்சுவை உணர்வால் தெறிக்க விட்ட பேராசிரியர்!

KarthigaBy : Karthiga

  |  6 Oct 2023 10:45 AM GMT

வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் இந்த காலத்தில் கிடைத்த வேலையை பெருமையாக நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லிக் கொள்வது பலரின் வழக்கம்தான். ஆனால் இங்கே ஒரு உதவி பேராசிரியர் தனக்கு வேலை கிடைத்ததை அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்று விளம்பரம் செய்துள்ள பாணி இணையத்தை கலக்கி வருகிறது.


மகாராஷ்டிராவை சேர்ந்த பிரதீக்சித் பாண்டே என்ற உதவி பேராசிரியருக்கு அமெரிக்காவின் சாண்டா பர்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக கிளையில் தகவல் தொடர்பு துறையில் வேலை கிடைத்துள்ளது. அதை அவர் அரசியல்வாதிகளின் சுவர் விளம்பரம் போல போஸ்டர் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது சிரிப்பை வரவழைத்துடன் பலரின் இதயத்தையும் ஈர்த்துள்ளது.


ஜனவரி 2024 முதல் உதவி பேராசிரியராக சேர்கிறேன் என்பதே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பெரியவர்களின் ஆசிகள் கொட்டி கிடைக்கின்றன என்று எழுதி இந்திய அரசியல்வாதி போல உடை அணிந்து கழுத்தில் மாலை அணிந்து வெற்றி குறி காட்டி போஸ் கொடுத்துள்ளார் . வாழ்த்து தெரிவிப்பதாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் படங்களையும் போட்டுள்ளார் அந்த நகைச்சுவை உணர்வு மிக்க உதவி பேராசிரியர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News