இலங்கை தொழிலதிபர் எரித்துக்கொலை: கொழும்பில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!
பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்லிம் கும்பலால் எரித்துக் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டிக்கின்ற வகையில் கொழும்புவில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
By : Thangavelu
பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்லிம் கும்பலால் எரித்துக் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டிக்கின்ற வகையில் கொழும்புவில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சியல்கோட் என்ற இடத்தில் இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரா என்பவர் தொழில் தொடங்கி அங்கு ஏராளமானோர்களுக்கு வேலை அளித்து வந்தார். இதனிடையே முஸ்லீமுக்கு எதிராக கருத்தை பிரியந்த குமாரா கூறியதாக சொல்லி, அந்நாட்டை சேர்ந்தவர்கள் அவரை சாலையில் வைத்து பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பல நாடுகள் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த சம்வத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் கொழும்பு நகரில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் தூதரகம் முன்பு சிங்கள தேசிய ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் இலங்கை தூதரகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai