Kathir News
Begin typing your search above and press return to search.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசயம் பூமிக்கு அருகில் வரும் அரிய வால்நட்சத்திரம்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசயம். பூமிக்கு அருகில் வரும் அரிய வால் நட்சத்திரம். வருகிற ஒன்றாம் தேதி வெறும்கண்ணால் பார்க்கலாம்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசயம் பூமிக்கு அருகில் வரும் அரிய வால்நட்சத்திரம்

KarthigaBy : Karthiga

  |  27 Jan 2023 8:15 AM GMT

நவீன அறிவியல்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன. அவை ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பதுதான் சுவாரஸ்யம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால் நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று மிகவும் பிரகாசமாக பூமிக்கு அருகே வந்து செல்ல உள்ளது. ஐம்பதாயிரம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த அதிசயத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் .இந்த வால் நட்சத்திரம் தோராயமாக வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி பூமிக்கு அருகில் வரும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.


இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பூமிக்கு அருகே அதாவது 4.2 கோடி கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்ல உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களால் கூட பார்க்கலாம். இருப்பினும் அன்றைய தினம் சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மிகவும் இருட்டாக இருந்தால் மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மிக அருகே வந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த அரிய வால்நட்சத்திரம் அடுத்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் தெரியும். இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே 'நியோ வைஸ்' என்ற வால் நட்சத்திரம் வந்தது அதற்கு பிறகு தற்போது தான் வெறும் கண்களால் பார்க்க கூடிய வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே வர உள்ளது.


இந்த வால் நட்சத்திரம் உருவாகி 50000 ஆண்டுகள் இருக்கலாம்.கடைசியாக வால் நட்சத்திரத்தை பார்த்த மனிதர்கள் பனியுகத்தைச் சேர்ந்த 'ஹோமோ ஹேப்பியன்ஸ் ' ஆகவே இருப்பார்கள். அதாவது 'நியாண்டர்தால்' மனிதர்கள் இந்நிகழ்வை பார்த்திருக்க கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து இரண்டாம் தேதிக்குள் காட்சியளிக்கும் போது மண்டலத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News