Kathir News
Begin typing your search above and press return to search.

ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த ஆறு நபர்கள் பயணிக்க கூடிய பேட்டரி ஸ்கூட்டர்

மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது சில வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வார்.அதில் ஒன்றுதான் 6 நபர்கள் பயணிக்க கூடிய பேட்டரி ஸ்கூட்டர்.

ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த ஆறு நபர்கள் பயணிக்க கூடிய பேட்டரி ஸ்கூட்டர்

KarthigaBy : Karthiga

  |  10 Dec 2022 10:45 AM GMT

மகேந்திர நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக மாறி உள்ளது. இரண்டு சக்கரங்கள் மட்டுமே கொண்ட இந்த ஸ்கூட்டரில் ஒருவர் பின் ஒருவராக மொத்த ஆறு பேர் பயணம் செய்கின்றனர் . முதலில் இதை ஒரு இளைஞர் மட்டுமே ஓட்டுகிறார். பின்னால் மீது ஐந்து பேர் அமர்வதற்கான இருக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் அந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது பேலன்ஸ் தவறாமல் இருக்க பிடித்துக் கொள்ள கைப்பிடியும் இருக்கிறது. கால்களை வைத்துக்கொள்ள பூட்ரெஸ்டும் இருக்கிறது.


இந்த மின்சார இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணம் செய்யலாம் என்பது மட்டும் சுவாரஸ்யம் இல்லை. இதில் உள்ள பேட்டரி மற்றும் மைலேஜ் மிகவும் முக்கியம் முழுமையாக சார்ஜ் செய்தால் ஆறு பேர் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற எட்டு முதல் பத்து ரூபாய் மட்டுமே செலவாகும் .அப்படி என்றால் வெறும் பத்து ரூபாய் செலவில் 150 கிலோமீட்டர் பயணிக்க முடியும். அதுவும் ஆறு பேர் பயணித்தால் ஒரு நபருக்கு வரும் ரூபாய் 1.66 தான் செலவாகும் எவ்வளவு குறைந்த செலவில் 150 கிலோமீட்டர் தூரம் பயணம் என்பது இதுவரை எந்த வாகனத்திலும் சாத்தியமில்லை. ஆனால் இந்த மின்சார இருசக்கர வாகனத்தில் வேகம் குறித்த தகவல்கள் இல்லை. அதே வேளையில் இந்த வீடியோவில் மேலும் சில அம்சங்கள் இருப்பதை காணப்படுகிறது. ஸ்கூட்டரின் முன் பக்கம் எல்.இ.டி விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது முன் பகுதி விளக்காக வேலை செய்யும். இரவு நேரங்களில் பயன்படுத்த இது உதவும்.


அடுத்ததாக மிக முக்கியமான சஸ்பென்சனை பொறுத்தவரை முன் பக்கமும் , பின் பக்கமும் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளம், மேடு மற்றும் சாலைகளில் வேகத்தடைகள் இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் பயணிக்க முடியும். இந்த மின்சார ஸ்கூட்டர் பார்க்க நன்றாக இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஆறு பேர் அமரும் அளவிற்கு நீளமாக இருப்பதால் இந்த ஸ்கூட்டரை திருப்புவது கடினம். வேண்டும் என்றால் இதை நீண்ட நிலப்பரப்பு கொண்ட உள் கட்டமைப்பு பயன்பாட்டுக்காக பயன்படுத்தலாம். அல்லது பெரிய மால்களில் சிறுவர்கள் ஓட்டுவதற்காக பயன்படுத்தலாம் என்கின்றனர் வாகனத்துறை நிபுணர்கள்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News