கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான வைரஸ்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ஹெச்.5.என்.1 வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
கொரோனாவை விட நூறு மடங்கு ஆபத்தான எச்.5.என்.1 வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோயிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை .எதற்காக விஞ்ஞானிகள் மற்றொரு தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை தொடங்கியுள்ளனர். தொற்றுநோய்க்கான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா களத்தில் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை காட்டிலும் இந்த தொற்று நோய் மிகவும் பேரழிவு ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
பறவை காய்ச்சலின் எச் 5 n1 வகை வைரஸ் ஆனது மிகவும் தீவிரமானது. என்றும் அதன் மாதிரிகள் பசு ,பூனை, மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகளிடம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பால் பண்ணையில் பணிபுரியும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்காவின் டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியில் டெக்ஸாஸில் ஹெச்.5.என்.1 வைரஸ் பரவியுள்ளது. இது பறவை காய்ச்சலாக இருக்கலாம்.
தற்போது அவருக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெக்சாசின் பார்மர் கவுண்டியில் சுமார் 1.6 மில்லியன் முட்டையிடும் கோழிகள் மற்றும் மூன்று லட்சத்து 37 ஆயிரம் குஞ்சுகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதால் அவை அழிக்கப்பட்டன. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் அபாயம் இல்லை என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கால்நடை பராமரிப்பு துறை கூறியுள்ளது.
SOURCE :Makkalvelicham