ஆதார் கார்டு விவரங்களை எத்தனை முறை மாற்றிக் கொள்ள முடியும்?
ஆதார் அட்டையின் விவரங்களை எத்தனை முறை மாற்றிக் கொள்ளலாம்.
By : Bharathi Latha
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் முக்கியமான ஒரு சான்றிதழ் ஆகா ஆதார் இருந்து வருகின்றது. எனவே அத்தகைய சான்றிதழ் ஆதார் கார்டில் உங்களுடைய விபரங்களை டெமோகிராபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் இரண்டு வகையாக பிரித்து நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அடிக்கடி ஆதார் கார்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும்போது அவற்றை எத்தனை முறை மாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆதார் கார்டில் உள்ள உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி தோன்றியவற்றை சில குறிப்பிட்ட முறை மட்டும்தான் மாற்றிக்கொள்ள முடியும். அரசாங்கம் அங்கீகரித்தல் முறைக்கு மேல் நீங்கள் முயற்சிக்கும் பொழுது அது தவறுதலாக கருதப்படும் எனவே எத்தனை முறை உங்கள் பயோ-மெட்ரிக் தகவல்களை திருத்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தற்போது பார்ப்போம். சிலர் தனியார் சேவைகளுக்கும் கூட ஆதார் கட்டாயமாகியுள்ளது. நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும். எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதாரில் இடம்பெறும் தகவல்களுக்கும், நம்மிடம் உள்ள தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கவில்லை என்றால் அவற்றைத் திருத்திக் கொள்ள நாம் ஆதாரத்துடன் அருகிலுள்ள இ-சேவை மையம் செல்ல வேண்டும். மேலும் இந்த சேவை மையத்தில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் மாற்றிக் கொடுப்பார்கள் அதற்குரிய பணத்தை கட்டி மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பாக பெயர், முகவரி, DOB போன்ற விவரங்களை 2 முறை மட்டும் தான் மாற்றிக்கொள்ள முடியும்.
Input & Image courtesy:News 18