Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் விவரம் பயன்படுத்தப்படாது - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் விவரங்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய மந்திரி தெரிவித்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் விவரம் பயன்படுத்தப்படாது - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

KarthigaBy : Karthiga

  |  6 April 2023 4:00 AM GMT

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய மின்னணு மற்றும் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ராஜு சந்திரசேகர் கூறியதாவது:-


மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் விவரங்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்கள் வழங்க இருப்பதாக இந்திய தனித்து அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


அவற்றில் இறந்தவர்களை உத்தேசமாக கழித்தது போக உயிரோடு இருக்கும் ஆதார் அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1330 கோடியை 20 லட்சமாக உள்ளது.இது கடந்த ஆண்டின் உத்தேச மக்கள் தொகையில் 94 சதவீதமாகும். இறந்தவர்களின் ஆதார் எண்களை நீக்குவதற்காக அந்த எண்களை பெறுவதற்கான வசதி எதுவும் இல்லை இவ்வாறு அவர் கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-


பழங்குடியினர் பகுதிகளில் ரயில் போக்குவரத்து வசதிகளை அளிப்பதற்காக 'ஜஞ்சாதியாக கௌரவ் வழித்தடம் ' என்ற புதிய வழித்தடம் அமைக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி ரூபாய் 70,000 கோடி செலவில் ஆன வழித்தடத்தின் கீழ் புதிய ரயில் பாதை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவருக்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News