Kathir News
Begin typing your search above and press return to search.

கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் - மத்திய அரசு!

கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் - மத்திய அரசு!

KarthigaBy : Karthiga

  |  10 Dec 2023 7:15 AM GMT

ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்பவர்களுக்கு கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு போன்றவை பெறப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கைவிரல்கள் இல்லாததால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி ராஜூ சந்திரசேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த பெண்ணின் கருவிழி பதிவு மட்டும் பெற்றுக்கொண்டு ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்தார்.


இதை தொடர்ந்து ஆதார் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை வழங்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து ஆதார் பதிவு மையங்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


ஆதார் அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் கைரேகை வழங்குவதற்கு இயலாவிட்டால் அவரது கருவிழியை பதிவு செய்து கொண்டு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும். இதே போல கருவிழி பதிவு வழங்க முடியாதவருக்கு கைவிரல் பதிவு செய்து கொண்டு ஆதார் வழங்கலாம். அதேநேரம் ஏதாவது காரணத்தால் இந்த இரண்டையும் வழங்க முடியாதவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும்.


விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு இரண்டையும் வழங்க முடியாத நபரின் பெயர் பாலின முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். விரல்கள் அல்லது கருவிழி அல்லது இரண்டும் கிடைக்காததை முன்னிலைப்படுத்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்தின் மேற்பார்வையாளர் அத்தகைய பதிவை சரி பார்க்க வேண்டும். தேவையான தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஒவ்வொரு தகுதியான நபருக்கும் பயோமெட்ரிக் வழங்க இயலாமையை பொருட்படுத்தாமல் ஆதார் எண் வழங்கலாம்.


ஆதார் ஆணையம் ஒவ்வொரு நாளும் சுமார் 1000 பேரை மேற்கூறிய விதிவிலக்கான பதிவுகளின் கீழ் பதிவு செய்கிறது. அந்த வகையில் விரல்கள் இல்லாமல் அல்லது ரேகை வழங்க இயலாமை மற்றும் கருவிழி இல்லாமை அல்லது இரண்டு விழிகளும் இல்லாதவர்கள் என சுமார் 29 லட்சம் பேருக்கு இதுவரை ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News